4 நாட்களில் இவ்வளவு கோடியா ? மலைக்க வைக்கும் தர்பார் வசூல்

0
47

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’.

நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 9-ந் தேதி உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் இப்படம் உலகளவில், 4 நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here