தனுஷ் கேக் வெட்டி கொண்டாட்டம்

0
11

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் சிங்கிள் டிராக்கான “சில் புரோ” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here