பிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..!

0
139

லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார்.

தொடர்ந்து ‘பாஸ் என்கிற பாஸ்கரன், வேலைன்னு வந்துட்டா, தனுசு ராசி நேயர்களே ‘உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அஷ்வின் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த வித்யாஸ்ரீ என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது இருவீட்டைச் சேர்ந்த பெற்றோர்களின் சம்மதத்துடன் ஜூன் 24-ம் தேதி காதலி வித்யாஸ்ரீயை கரம் பிடித்தார். இந்த ஜோடியின் திருமணம் எளிமையாக திருமணம் நடந்தது.

கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும், இத்திருமண செய்தி அறிந்த திரைப்பிரபலங்கள் மணமக்களுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்தி வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here