12 வேடங்களில் அசத்தும் சியான் ! முறியடிக்கப்படும் சாதனைகள்

0
58

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ‘கோப்ரா’ படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14-ந் தேதியான காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்சினிமாவில் நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார்.

முந்தைய சாதனையை முறியடிக்கும் முயற்சியாக விக்ரம் 12 வேடங்களில் நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here