ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு – கொரானாவால் முடங்கியது சினிமா

0
13

கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் இன்று முதல் உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி சீரியல் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்புகிறார்கள்.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். இதனால் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்று தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.

இந்நிலை அடுத்த மாதமும் நீடித்தால் இந்த இழப்பு அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here