ரஜினி 168 – ரிலிஸ் தேதியில் மாற்றம்

0
21

ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர்.

தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கை
கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சூரி, சதீஷ் ஆகியோர் காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள்.

டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்க படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் இந்தாண்டு ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here