இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் ‘சக்ரா’!

0
37

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் ‘சக்ரா’ என்ற திரைப்படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா கஸரென்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், சென்னை சுற்றுவட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here