கொரானா பாதிப்பு – நர்ஸாக சேவை புரியும் ஷாருக்கான் பட நடிகை

0
58

ஷாருக்கானின் “ஃபேன்” திரைப்படத்தில் நடித்த நடிகை, ஷிகா மல்ஹோத்ரா.

உலகமே தற்போது கோவிட் -19ஐ எதிர்த்துப் போராடி வருகிறநிலையில் மும்பை மருத்துவமனையில் ஒரு செவிலியராக பணிபுரிய தன்னார்வம் காட்டியுள்ளார்.

“நர்ஸோ, நடிகையோ, எதுவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதற்கு உங்கள் ஆசீர்வாதம் தேவை. தயவுசெய்து வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், அரசு சொல்வதை பின்பற்றுங்கள்” என ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதோடு, மருத்துவப் பட்டம் பெற்றவர்களை இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் சேருமாறும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது மும்பை, ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் ஷிகா.

https://www.instagram.com/shikhamalhotra_official/?utm_source=ig_embed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here