பிகில் டீஸர் எப்போதுதான் வரும்? ஒருவழியாக அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி (வீடியோ)

0
62

பிகில் டீஸர் இந்த வாரம் வரும் என்றுதான் ரசிகர்கள் அனைவரும்காத்திருந்தனர். இசை வெளியீட்டு விழாவில் அட்லீ பேசும்போது அக்டோபர் முதல் வாரத்தில் டீஸர் வெளியாகும் என கூறியிருந்தார்.

ஆனால் டீசருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது ஆனால் டீஸர் வரவில்லை என கோபமாக ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “பிகில் டீசர் இந்த வாரம் வர வாய்ப்பில்லை, எப்போது வரும் என திங்கட்கிழமை அறிவிக்கிறேன்” எனகூறினார்.

இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது கடும் கோபத்தில் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். “படத்தையாவது சொன்னது போல தீபாவளிக்கு வெளியிடுங்கள்.. அதையும் தள்ளி வைச்சுடாதீங்க” என தளபதி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினரிடம் விசாரித்ததில் டீசர் செவ்வாய்கிழமை வெளியாகலாம் என தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here