பிகில் அதிகாலை சிறப்பு காட்சி போடப்படுமா? அரசின் இறுதி முடிவு இதுதான்

0
83

பொதுவாக பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றாலே எப்போதும் அதிகாலை காட்சிகள் இருக்கும். முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் பெரிய ஆரவாரத்துடன் கொண்டாடி ரசிப்பார்கள்.

விஜய்யின் பிகில் படத்திற்கும் அப்படி நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அது பற்றி தயாரிப்பாளர் தரப்பில் அரசிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்த உடன்பாடும் அதில் எட்டவில்லை.

இந்நிலையில் சிறப்பு காட்சி இல்லை என உறுதியாக அறிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜு. மேலும் டிக்கட் விற்கப்பட்டிருந்தால் பணம் திருப்பி தரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
விஜய்யின் முந்தைய படமான சர்க்கார் படத்திற்கும் சிறப்பு காட்சி அனுமதியை அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here