பிகில் திரைவிமர்சனம்

0
254

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து தளபதி விஜய்-அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் தான் பிகில்.
கடந்த இரண்டு படங்களும் பெரிய ஹிட் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதை படம் போது செய்ததா? விமர்சனம் இதோ.. தொடர்ந்து படியுங்கள்.

கதை:

மைக்கேல் (விஜய்)க்கும் அரசியலில் பெரிய புள்ளியாக இருக்கும் அமைச்சருக்கும் பிரச்சனை ஒன்று வருகிறது. சென்னையில் உள்ள கல்லூரியை இடித்துவிட்டு நகரத்தின் வெளியே மிக தூரமான இடத்தில் கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். அதனால் போராட்டத்தில் இறங்க, அவர்களை துரத்தி அடிக்கின்றனர் அமைச்சர் ஆட்கள். அந்த சமயத்தில் விஜய் அவர்களை அடித்து துவைக்கிறார்.

அதன் பிறகு விஜய்யின் நண்பரான கதிர் வில்லன் டேனியல் பாலாஜியால் குத்தப்படுகிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருக்கும் கதிர் இதனால் அவர்களை இனி வழிநடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் விஜய்யை பயிற்சியாளராக போட சொல்கிறார் கதிர்.

ஒரு ரௌடியை எப்படி பயிற்சியாளராக போட முடியும் என அவர்கள் கேட்க, மைக்கேல் உண்மையில் யார் என்பதை கூறுகிறார் கதிர். கால்பந்து வீரராக இருந்த பிகில் தான் மைக்கேலாக இருக்கிறார். அவர் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த சமயத்தில் அவரது அப்பா ராயப்பன் கொல்லப்படுகிறார். பதிலுக்கு அவரை விஜய் கொல்கிறார்.

அதனால் பிகில் போட்டியில் விளையாட முடியாமல் போகிறது. அதன் பிறகு தன் பகுதி மக்களுக்காக வாழ்ந்து வருகிறார் மைக்கேலாக.
இதை ஒப்புக்கொண்டு விஜய்யை பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கின்றனர். பல தடைகளை தாண்டி விஜய் எப்படி அவர்களை வெற்றி பெற வைத்தார் என்பது மீதி படம்.

விமர்சனம்:

ராயப்பேட்டையை கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பன் விஜய், தன்னை போலவே மற்ற புல்லிங்கோவும் ஆகிவிட கூடாது என நினைத்து பிகிலை கால்பந்தாட்ட வீராக மாற்ற நினைக்கிறார். அந்த கதாபாத்திரம் வருவது மிக சிறிய அளவு தான் என்றாலும் அந்த ரோலில் விஜய் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

விஜய்யை காதலிக்கும் பெண்ணாக நயன்தாரா. பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக இருக்கிறார். விஜய்யை தான் திருமணம் செய்வேன் என அப்பா ஏற்பாடு செய்த திருமணத்தையும் நிறுத்துகிறார். அழகு தேவதையாக ஜொலிக்கும் நயன்தாராவிற்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அட்லீ.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட். திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான். பின்னணி இசையிலும் அவர் மிரட்டியுள்ளார்.

ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவை குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். அந்த அளவுக்கு படம் கலர்புல்லாக உள்ளது.

படத்தின் நீளம் தான் மிகப்பெரிய மைனஸ். இழு இழு என இழுப்பதால் சற்று சோம்பல் தட்டுகிறது படம் பார்க்கும்போது. நீளத்தை சற்று குறைத்திருக்கலாமே டைரக்டர்.

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு பிகில் தீபாவளி சரவெடி

[select-review review_id=’1494′]

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here