பிக்பாஸ் சர்ச்சை நடிகையின் வீட்டுக்கு சென்ற சேரன்.. பரவும் புகைப்படங்கள்

0
52

இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு மற்ற போட்டியாளர்களை சந்தித்து வருகிறார். அவருக்கு வீட்டுக்குள் சில போட்டியாளர்கள் விருந்துக்கு வந்து போனார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சையான முறையில் வெளியேறிய நடிகை மதுமிதாவை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார்.

அங்கு அவருக்கு மதுமிதா விருந்து வைத்துள்ளார். அது பற்றி சேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “பிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்.. உபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்..” என சேரன் பதிவிட்டுள்ளார்.

“உங்களின் வருகையால், எங்களின் இல்லம் மகிழ்ச்சியில் மூழ்கியது” என மதுமிதா பதில் அளித்தார்.

“நாமும் நம்மை சார்ந்தவர்களும் எப்போதும் சந்தோசமாக இருக்கும்படியான சூழலை உருவாக்கிக்கொள்வது நம்கையில்தான்… உங்கள் இருவரின் வாழ்க்கை அழ்கானது.. எப்போதும் சந்தோசப்பூக்கள் பூக்கட்டும்..” என மீண்டும் வாழ்த்தியுள்ளார் சேரன்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here