என்ன பிக்பாஸ் புகழ் வனிதாவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
88

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தளபதி விஜயுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி மற்றும் யூட்யூப் சேனல் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பற்றி கூறிய வனிதா “எல்லா பெண்ணுக்கும் தனக்கு சிறப்பான ஒரு துணையை தேட வேண்டும் என்ற கனவு இருக்கும். இப்பொழுது அந்த கனவு நனவாகி உள்ளது.

எனது குழந்தைகளிடம் அவர் பேசிய பொழுது, அவர்களும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டனர். அந்த தருணம் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதுதான் மிகவும் சிறப்பான தருணம். அவர்களுக்கும் அவரை பிடித்திருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது “அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here