ஊசி இடம் கொடுக்காமல் எப்படி.. பெண்களை மிக மோசமாக பேசிய பாக்கியராஜ்

0
34

தமிழ் சினிமாவில் மிக மூத்த கலைஞர்களில் பாக்கியராஜும் ஒருவர். அந்த காலத்தில் அவர் இயக்கிய நடித்த படங்கள் தான் ஆபாச கருத்துக்கள் கொண்டதாக இருந்தன என்றால் தற்போது அவர் நிஜத்தில் பேசும் விஷயங்களில் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.

நேற்று முன்தினம் ‘கருத்துக்களை பதிவு செய்க’ என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பாக்கியராஜும் கலந்துகொண்டார். அங்கு அவர் பொள்ளாச்சி சம்பவம் பற்றி குறிப்பிட்ட சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“பொள்ளாச்சி சம்பவத்தில் ஆண்களை மட்டும் குறை கூற முடியாது. பெண்களில் பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி போகும்” என கேட்டுள்ளார்.

“பெண்கள் கள்ளக்காதல் செய்தால் குழந்தை மற்றும் கணவரை கொன்றுவிடுகிறார்கள். ஆனால் ஆண்கள் சின்னவீடு வைத்திருந்தாலும் முதல் மனைவியை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்” என கூறி பெண்களை குறை சொல்லியுள்ளார்.

பெண்கள் சுயகட்டுப்பாடு உடன் இருக்கவேண்டும் என பாக்கியராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here