பாங்காக்கில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்

0
25

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படமாகிறது.

இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.

மேலும் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here