பழமொழி சொல்வதற்கு பயப்படும் பாக்யராஜ்

0
25

சென்னையில் நடக்கும் 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய பாக்யராஜ், பழமொழி சொல்லவே பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

17-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:- ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்று கூறினார்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று கலைவாணர் அரங்கில் துவங்கியது.
19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. முதல் படங்களாக, கொரிய படமான ‘தி பாரசைட்’ மற்றும் ஜெர்மன் படமான ‘கண்டர்மான்’ படமும் திரையிடப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here