எதிர்ப்புகளை சம்பாதிக்கும் பாக்யராஜ்

0
38

இயக்குனர் பாக்யராஜின் பெண்கள் பற்றிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வசிரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இயக்குநர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலவீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பாக்யராஜ் கூறியது ரொம்பவே ஸ்பெஷலான வாக்கியம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here