கொரோனா பயத்தால் ஆஸ்திரேலிய பயணத்தை நிறுத்திய காந்த கண்ணழகி பாடகி

0
29

கொரோனா பயத்தால் ஆஸ்திரேலிய பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வந்ததாக பிரபல பின்னணி பாடகி, நீத்தி மோகன் தெரிவித்துள்ளர்.

தமிழில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்த ஐ படத்தில் வெளியான, ‘மெர்சலாயிட்டேன்..’, விக்னேஷ் சிவன் இயக்கிய, ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற, ‘நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே ..’, விஜய்யின் தெறி படத்தில் வரும், செல்லக்குட்டி, பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த, ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் காந்த கண்ணழகி உட்பட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவர், சமீபத்தில் தனது கணவர் நிஹர் பாண்ட்யா, சகோதரிகள் முக்தி, சக்தி மோகன் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா சென்றிருந்தபோதுதான், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹாங்ஸ், அவர் மனைவி ரிடா வில்சன் ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, இவர்களுக்குத் தெரிய வந்தது.

இதைக் கேள்விபட்டதும் பயம் அதிகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் நீத்தி மோகன்.

என் அம்மாவும் அப்பாவும் உடனடியாகத் திரும்பிவிடும்படி கூறினார்கள்.

நாங்கள் மார்ச் 17 ஆம் தேதி திரும்புவதற்கானத் திட்டத்தில் இருந்தோம். ஆனால், 12 ஆம் தேதியே திரும்பி விட்டோம். அந்த அனுபவம் பயங்கரமாக இருந்தது.

நாங்கள் விமான நிலையம் வந்தபோது, வெறிச்சோடி கிடந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லை. நாங்கள் தரையிறங்கியபோது குறைவான ஆட்களே காணப்பட்டார்கள் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here