கிரிக்கெட் வீராங்கனை பயோபிக்சரில் நடிக்கும் அனுஷ்கா சர்மா

0
7

பாலிவுட்டில் விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாகிவிட்டது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், மேரி கோம், குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன.

தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்) குறித்து படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி (37) பயோபிக் உருவாகிறது.

ஒருநாள் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

‘சதாக் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இவரது வாழ்க்கை குறித்து சினிமா தயாராக உள்ளது. இதில் ஜூலன் வேடத்தில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளதாக தெரிகிறது.

படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு செல்லவுள்ளார்.

இதேபோல் மித்தாலி ராஜ் பயோபிக்கில் டாப்சி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here