அட்லீ இயக்கிய படங்களில் பிடித்த படம் இதுதானாம்!

0
47

இயக்குனர் அட்லீ இதுவரை 4 படங்களை இயக்கியுள்ளார். ராஜா ராணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யுடன் தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றினார்.

போலீஸ் கதைக் களத்தில் விஜய்-அட்லீ கூட்டணியில் முதல் படமாக தெறி வெளியானது. அதன் பின்னர் விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்க மெர்சல் உருவானது.

மூன்றாவதாக பெண்கள் கால்பந்தை மையப்படுத்தி உருவான பிகில் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் ‘தெறி’ தான் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தெறி என் இதயத்திற்கு நெருக்கமான படம். எல்லா நன்றிகளும் விஜய் அவர்களுக்கு தான். அண்ணா நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது.

சிறப்பான வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா மற்றும் தெறி படக்குழு, வி.கிரியேஷன்ஸ் தாணு சார்’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here