அட்லீக்கு அடித்த ஜாக்பாட்.. அடுத்த படம் இவருடனா? கசிந்த பிரம்மாண்ட தகவல்

0
496

இயக்குனர் அட்லீ தற்போது இயக்கியுள்ள பிகில் படம் சென்சார் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தோடு சேர்த்து தொடர்ந்து மூன்று விஜய் படங்களை இயக்கிவிட்டார் அட்லீ. அவரது அடுத்த படம் பற்றிய சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் ஐபிஎல் போட்டி பார்க்க சென்னை வந்தபோது அட்லீ அவரிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். அதற்கு தற்போது ஷாருக் ஓகே சொல்லியிருப்பதாகவும், அடுத்து அட்லீ-ஷாருக் கூட்டணியில் படம் துவங்கும் என செய்திகள்வருகிறது.
ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here