அசுரன் திரைவிமர்சனம்

0
73

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி சேர்கிறார்கள் என்றாலே படம் கிட்டத்தட்ட வெற்றிதான் என்கிற பேச்சு உள்ளது. அதற்கு ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களே சாட்சி. அந்த வரிசையில் தற்போது ரிலீஸ் ஆகியுள்ள அசுரன் படமும் இணையுமா? படம் எப்படி இருக்கிறது? முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவங்களை பகிர்கிறோம்.

சிவசாமி (தனுஷ்), வயதான தோற்றம், விவசாயம் தான் பணி, இருக்கும் கொஞ்ச நிலத்தை வைத்து மனைவி மகன்களுடன் வாழ்கிறார். குடிப்பழக்கம் ஒன்று மட்டுமே அவரிடம் உள்ள மோசமான பழக்கம்.

இவரது நிலத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களையும் வாங்கி முள்கம்பி வேலி போட்டு வைத்திருக்கிறார் வில்லன் ஆடுகளம் நரேன். தனுஷின் நிலத்தையும் பிடிங்கிவிட்டால் மொத்தமாக அங்கு ஒரு சிமெண்ட் ஆலை கட்ட திட்டம் போடுகிறார். ஒரு சமயம் கிணற்றில் நீர் இறப்பது தொடர்பாக தனுஷ் மனைவி மஞ்சு வாரியருக்கும் வில்லனின் மகனுக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது. அதில் தனுஷின் மூத்த மகன் வில்லனின் மகனை அடித்து துவம்சம் செய்கிறார்.

பணபலம் கொண்ட வில்லன் போலீசில் சொல்லி தனுஷின் மூத்த மகனை பிடித்துச்சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஊரில் உள்ள அனைவரது காலிலும் விழு, உன் மகனை விட்டுவிடுகிறோம் என சொல்ல தனுஷும் தயங்காமல் அனைவரது காலிலும் விழுகிறார்.

மகன் போலீசிடம் இருந்து திரும்பி வந்தாலும், சில தினங்களில் கொடூரமான முறையில் வில்லன் கும்பலால் கொல்லபடுகிறார். கதறி துடிக்கிறது குடும்பம், ஆனால் தற்போதும் பொறுமையாகத்தான் இருக்கிறார் தனுஷ். இதை செய்தது யார் என தெரிந்தும் அமைதியாகவே இருக்கிறார். அவரது மனைவியும் பைத்தியம் பிடித்தது போல சுற்றிக்கொண்டிருக்கிறார்.

கடைசியில் இதையெல்லாம் பொறுக்கமுடியாத தனுஷின் இரண்டாவது மகன் ஒரு விஷயம் செய்கிறார். இது அந்த குடும்பதின் வாழ்க்கையையே நிலைகுலைய வைக்கிறது.

அப்படி என்ன செய்தார், தனுஷின் பொறுமைக்கு என்ன காரணம், இளம் வயதில் என்ன நடந்தது, வில்லன் தரப்பை ஜெயித்தாரா, தன் நிலத்தை காப்பாற்றினாரா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் மீதி படத்தில்.

மொத்த படத்தையும் தாங்கி நிற்பது த்ரில்லிங்காக உள்ள திரைக்கதையும், தனுஷின் நடிப்பும் தான். இந்த நடிப்புக்கு தனுஷுக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை படமாக்கியுள்ள வெற்றிமாறன் நம்மை சீட்டின் நுனியிலேயே நம்மை வைத்திருக்கிறார். இடைவேளை வரும் வரை இதே நிலைதான். அதன்பிறகு வரும் flashback காட்சிகள் நெஞ்சை கவர்கிறது. சாதிய கொடுமைகளை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து காட்டியது படம்.

ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை நம்மை புல்லரிக்கவைக்கிறது. பரபரப்பை நம் மூளைக்கே கடத்துகிறது அவரது ‘வா அசுர வா’ பிஜிஎம். இவ்வளவு இசை திறமையை வைத்துக்கொண்டு ஜீவி ஏன் நடிக்க மட்டும் அதிகம் கவனம் செலுத்துகிறார் என தெரியவில்லை.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை ரியலாக இருப்பது போல வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. எடின்டிங், ஒளிப்பதிவு என அனைத்து டெச்னிசியன்களுக்கும் ஒரு பெரிய ஹாட்ஸ் ஆஃப்.

மொத்தத்தில் 100% அசுரத்தனமான படம் இது. மிஸ் பண்ணாம தியேட்டரில் பாருங்க.

[select-review review_id=’1257′]
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here