அசுரன் 100 கோடி வசூல் சாதனை.. முக்கிய லிஸ்டில் தனுஷுக்கு ஐந்தாவது இடம்

0
91

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே வெற்றி என்பது பலமுறை நிருபிக்கப்பட்ட ஒன்று. தற்போது மீண்டும் அசுரன் படமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து விட்டனர் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு த்ரில்லாக படமாக்கியிருந்தார் இயக்குனர்.

மேலும் அசுரன் படத்தின் மொத்த வசூல் 100 கோடி ரூபாய் மைல்கல்லை தாண்டிவிட்டதாக பாக்ஸ்ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் அசுரன் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையும் அடக்கம்.

இந்த சாதனையை தொடும் ஐந்தாவது தமிழ் நடிகர் தனுஷ். இதை தற்போது தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி, அஜித், விஜய், சூர்யாவை தொடர்ந்து தனுஷும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here