குண்டான சமையல்காரராக நடிக்கும் அசோக் செல்வன்

0
33

கோலிவுட்டில் சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் அசோக் செல்வன்.

இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளது.

இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் அரபிக்கடலிண்டே சிம்ஹம் எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அசோக் அறிமுகமாகும் தெலுங்கு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் அனி சசி இயக்கும் ரொமாண்டிக் படத்தில் அசோக் செல்வன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நித்யா மேனன், ரித்து வர்மா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் அசோக் செல்வன் 100 கிலோ எடையுடன் கூடிய சமையல் கலைஞர் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக அவர் 20 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here