விஸ்வாசம் பாடலாசிரியர் எழுதிய கொரோனா பாடல் இதோ..!

0
40

அஜித்குமார் நடித்து மெகா ஹிட் அடித்த படம் விசுவாசம்.. இயக்குனர் சிவா இயக்கிய இப்படத்தில் அருண் பாரதி பாடல் வரிகளை எழுதி இருந்தார்..இந்த படத்தில் வெளியான டங்கா டங்கா டங்கா பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது..

அருண் பாரதி சண்டக்கோழி 2, கொலைகாரன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், தில்லுக்கு துட்டு 2, வால்டர் ஆகிய படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சினிமா பிரபலங்கள் மக்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பாடலாசிரியர் அருண் பாரதி, கொரோனா விழிப்புணர்வு பாடலை எழுதி வெளியிட அதற்கு அண்மையில் வெளியான வால்டர் படத்தின் இசையமைப்பாளர் இசையமைத்து பாடியுள்ளார்.

அந்த பாடல் வரிகள் இதோ….

பல்லவி

எத்தனை போர்களை

தாண்டினோம்

எத்தனை வலிகளைத்

தாங்கினோம்

கொரனோ என்னும்

தொற்றுக்கா – நாம்

தோற்றுப் போகப் போகிறோம் ?

அனைவரும் ஒன்றாய்

இணைந்துதான்

வெற்றிகள் ஆயிரம்

தேடினோம்

இனி தனித்தனியாகப்

பிரிந்துதான்

வெற்றியைப் பார்க்க போகிறோம்

குழிகளைத் தோண்டிப்

புதைத்தாலும் – அதில்

செடியாய் நாங்களும் முளைப்போமே

வைரஸ் என்கிற

ஆயுதத்தை – எங்கள்

ஒற்றுமை கொண்டு உடைப்போமே

சரித்திரத்தில் நாம்….

சரித்திரத்தில் நாம்….

சரணம் – 1

வெள்ளை உடையில் இராணுவ வீரன்

நீயும் பார்த்ததுண்டா

கொள்ளை நோயில் மருத்துவன் தானே

இராணுவ வீரனடா

லத்திகள் இன்றி புத்திகள் சொல்லும்

போலீஸ் பார்த்ததுண்டா

போலீஸ் எல்லாம் போலிகள் இல்லை

காவல் சாமியடா

அழுக்கை எல்லாம்

அடித்து விரட்டும்

துப்புரவுத் தொழிலாளி

உலகில் கடவுள்

இருந்தால் அவன்தான்

அவனுக்கும் முதலாளி

தனியாய் இருந்து

தடுப்பவன் எவனோ

அவனே அறிவாளி

உயிரை எடுக்கும்

கொரோனா நோயின்

உயிரை எடுப்பாய் நீ

சரித்திரத்தில் நாம்….

சரித்திரத்தில் நாம்….

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here