அமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த ஏ.ஆர்.ரகுமான்

0
9

கொரானா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது.

நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறநிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெற இருந்த தனது இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்து இருக்கிறேன். இசையால் அனைவரும் ஒன்றிணைவோம்.

எனது அடுத்த சுற்றுப்பயண விவரத்தை தகுந்த நேரத்தில் அறிவிப்பேன்.

அனைவரது உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் ரத்தானது அமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here