பட்ஜெட் மீறி செலவு செய்தாரா அட்லி? தயாரிப்பாளர் அர்ச்சனா கூறிய விளக்கம்

0
97

தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லீ மீது உள்ள பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால் அவர் பட்ஜெட்டுக்கு மீறி செலவு செய்கிறார் என்பது தான்.

அட்லீ தற்போது இயக்கியுள்ள பிகில் படத்திற்கும் அப்படி நடந்ததா என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டதற்கு என்ன பதில் கூறியுள்ளார் என பாருங்கள்.

“இது ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம். போட்ட பட்ஜெட்டை விட அதிகம் ஆகும் என எங்களுக்கு முன்பே தெரியும். தயாரிப்புச் செலவு என்பது தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநருக்கும் இடையே சம்பந்தப்பட்டது.

நாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் அவரால் எடுக்க முடியாது. நம்பிக்கை இருப்பதால்தான் செலவு செய்கிறோம். தயாரிப்பு செலவு என்பது தயாரிப்பாளர்-இயக்குனர் சம்பந்தப்பட்ட விஷயம், ” என கூறியுள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here