மறைமுகமாக எதிர்ப்பை தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்

0
33

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் அவ்வப்போது பதிவிடும் டுவிட்கள் வைரலாகிவிடுகிறது.

தற்போது அல்லா ரக்கா ரகுமான் என்று தன்னுடைய முழு பெயருடன் அச்சிடப்பட்டிருக்கும் விமான டிக்கெட்டை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதற்கு சில மறைமுக காரணங்கள் இருப்பதாக கூறி அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் ரகுமான் தன்னுடைய முழுப் பெயரை குறிப்பிட்டு மறைமுகமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here