கோலிவுட்டில் `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இப்படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் கூறுகையில், நான் நடிக்க வரும்போது, ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்ற கனவோடு வந்தேன். அதில் ஒன்று தற்போது நனவாகியுள்ளது.
இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 3 பாடல்களை ரெகார்ட் செய்துள்ளார்.
அடுத்த கனவு எப்போ நிறைவேறுமோ ?