பிரபல கர்நாடக இசைப் பாடகியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் அனுஷ்கா

0
13

நடிகை அனுஷ்கா, முதன் முறையக் கன்னட படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை அனுஷ்கா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தனது சொந்த மொழியான கன்னடத்தில் அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

இந்நிலையில், கன்னடத்தில் முதன் முறையாக, அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

பிரபல கர்நாடக இசைப் பாடகி, பெங்களூர் நாகரத்னம்மாளின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது.

இவர், மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர். திருவையாறில் தியாகராஜர் சமாதியின் மீது கோயில் எழுப்பியவர்.

தியாகராசர் ஆராதனை விழாவில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். இவரது மூதாதையர்கள் மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் பணியாற்றியவர்கள்.

இவரது வாழ்க்கை கதையில், நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அனுஷ்கா நடித்தால் மற்ற மொழிகளிலும் படத்தை வெளியிட வசதியாக இருக்கும் என்பதாலும் அவரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் அனுஷ்கா நடித்தால் அவர் நடிக்கும் முதல் கன்னடப் படம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here