இதையெல்லாம் பெண்களிடம் எதிர்பாரப்பது தவறு ! அனுஷ்கா

0
15

மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

ஐதராபாத்தில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக கூறப்படுகிறதே?

இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அனுஷ்கா, “அப்படி நடக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. காரணம் நான் எப்போதுமே வெளிப்படையாக இருந்து இருக்கிறேன்.

பெண்களிடம் இதுபோன்ற ஆதாயங்களை சினிமா துறையினர் எதிர்பார்த்தால் அது தவறு. அதனை தவிர்க்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here