கே.ஜி.எப் 2 ரிலிஸ் – பயந்து ஒதுங்குமா அண்ணாத்த !

0
12

கே.ஜி.எப்’ படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் யாஷுடன் சஞ்சய் தத் வில்லனாக மோதுகிறார்.

இந்தப் படத்தின் வெளியீடு அக்டோபர் 23-ம் தேதி என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துவிட்டார்கள்.

அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரஜினி நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’படத்தை அக்டோபர் 23-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.

ரஜினிக்கு தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வியாபாரம் உள்ளது.

ஆனால், ‘கே.ஜி.எப் 2’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, ‘அண்ணாத்த’ படத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும் என்பதனால் ’அண்ணாத்த’ அக்டோபர் 23-ம் தேதி வெளியிடப்படுமா அல்லது வேறு வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here