அனிருத் பாடிய பாடலுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு

0
21

எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘பட்டாஸ்’.

இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 16-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விவேக் மெர்வின் இசையில் ஏற்கனவே சில் புரோ மற்றும் முரட்டு தமிழன்டா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 3-வது பாடல் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத் பாடியுள்ளதால், இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here