யாரை காதலித்தேன் ; எப்படி கழற்றிவிடப்பட்டேன் – ஆண்ட்ரியா

0
46

தன் காதல் தோல்வி குறித்து பேசியபோது ஏற்பட்ட சிக்கலை தற்போதைய பேட்டியில் பூர்த்திசெய்திருக்கிறார் ஆண்ட்ரியா.

சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, பத்திரிக்கையாளர்கள் யாரும் இல்லை. கேமரா எதுவும் இருக்கவில்லை.

அதனால் என் வாழ்க்கை குறித்து சில வி‌ஷயங்களை வெளிப்படையாக சொன்னேன். நான் நடிகை என்பதையே மறந்து விட்டேன். அது தவறு என பின்பு தான் எனக்கு உரைத்தது.

புத்தகத்தில் உள்ள ஒரு கவிதையை நான் படித்தேன். அப்போது அது எதை பற்றியது என கேட்டார்கள். நான் என்னுடைய மோசமான ஒரு காதல் குறித்தது என கூறினேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காதல் அது. 10 வருடம் முன்பு தான் அந்த கவிதையை எழுதினேன். ஆனால் அதன்பிறகு நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் கிளம்பி விட்டது.

இதை எல்லாம் பார்த்து எனக்கு கோபம் தான் வந்தது. ‘நடிகர் அரசியல்வாதி’ என்றெல்லாம் சொல்கிறார்கள். கட்டுக்கதை போல ஒரு வி‌ஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்கள்.

அதற்கு எப்படி விளக்கம் அளிப்பது? அதனால் அமைதியாக இருந்துவிட்டேன் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here