17 ஆண்டுகள் திரைப்பயணம்.. கொரோனவால் ரத்தான நிகழ்ச்சி

0
16

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது திரையுல பயணத்தில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவரது முதல் படமான கங்கோத்ரி 2003ஆம் ஆண்டு வெளியானது.

இதனைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் 17 ஆண்டுகள் திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் ஏற்பாடு செய்து, திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here