பிறந்தநாளன்று வெளியான அல்லு அர்ஜுன் படத்தின் பர்ஸ்ட் லுக்!

0
41

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுனுக்கு ஆர்யா, ஆர்யா-2 ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுகுமார் இந்த படத்தினை இயக்குகிறார். புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சுகுமார் முன்னதாக ராம்சரணை  வைத்து இயக்கிய ரங்கஸ்தலம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் அல்லு அர்ஜுனின் முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலோ படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

எனவே அல்லு அர்ஜுன் – சுகுமார் இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் தயாராகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here