இரண்டு அஜித் – வலிமை நியூ அப்டேட்

0
7

சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதையடுத்து புதிய படமாக வலிமை அறிவிக்கப்பட்டது.

அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் இப்படத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்பந்தய காட்சிகள் படத்தில் இடம் பெறுகின்றன.
வலிமை படத்தில் வில்லனாக நடிக்க வைக்க எஸ்.ஜே.சூர்யாவை பரிசீலிப்பதாக தகவல் பரவி உள்ளது. வலிமை படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது.

படத்துக்காக அவர் இளமை தோற்றத்துக்கு மாறிய புகைப்படமும் ஏற்கனவே வெளியானது. தற்போது கருப்பு கண்ணாடி அணிந்த இன்னொரு தோற்றமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன்மூலம் அவர் வலிமை படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. ஆனால் இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளையில் சமீபத்தில் போனிகபூரை நயன்தாரா சந்தித்து பேசினார். இதன்மூலம் வலிமை படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்தால் அது எப்போதுமே வெற்றிப் படம் தான். உதாரணம், வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களை சொல்லலாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here