கஜினி படத்திற்காக அஜித் கொடுத்த ஐடியா என்ன ? பழைய நினைவை பகிர்ந்த முருகதாஸ்

0
34

அஜித் நடித்த தீனா படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

முருகதாஸ், மீண்டும் அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அஜித் அப்படத்தில் இருந்து விலகினார்.

இந்த கதையை தான் சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் படமாக எடுத்தார் முருகதாஸ்.

மிரட்டல் படத்தின் கதையை அஜித்திடம் சொன்னதும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சிக்ஸ் பேக் வைத்தால் தான் சரியாக இருக்கும்
என யோசனை கூறினார்.

அதுவரை எனக்கு அந்த ஐடியாவே இல்லை, அவர் சொன்ன பிறகு தான் அது சரியாக இருக்கும் என எண்ணினேன்.

இருப்பினும் இந்த கூட்டணி அமையாத போதிலும், அதே கதையில் நடித்த சூர்யா மற்றும் அமீர்கான் இருவரும் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here