மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் திதி நிகழ்வில் நடிகர் அஜித் !

0
58
Thanks - Maalaimalar

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி நிகழ்வில் நடிகர் அஜித் பங்கேற்றார்.

கடந்த 2018-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார்.

அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

இதில் போனி கபூரின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டார்.

ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் அஜித் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here