அந்த அறிக்கை போலியானது – அப்ப தயாரிச்சது விஜய் ரசிகர்களா ?

0
50

ரசிக மன்றங்களை கலைத்துவிட்ட அஜித் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார்.

ஆனால், அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

நேற்று அஜித் பெயரில் ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் பரவியது. அது அஜித் கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடில் வெளியானதால் பரபரப்பானது.

அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.

இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

சைபர் கிரைம் அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, “அந்த அறிக்கை போலியானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here