வெப் தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர்

0
23

நடிகர் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளனர்.

கோலிவுட்டில் மத யானை கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில், ஜடா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் நடிக்கும் வெப் தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர்.

இவர்கள் ஓரம் போ, விக்ரம் வேதா ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்கள்.

இந்த வெப் தொடருக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here