நீண்ட நாட்களுக்கு பின்பு தமிழில் நடிக்கும் மேடி

0
7

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’.

துல்கர் சல்மான், அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது.

இந்நிலையில், இந்த படம் தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்கிறார்.

இறுதிச்சுற்று படத்துக்கு அப்புறம், நீண்ட வருடங்களுக்கு பின்பு மாதவன் தமிழில் நடிக்கிறார்.

“பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார்.

மாதவனும், ஷ்ரத்தாவும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here