பரிதாபப்படும் அதிதி ராவ்

0
13

கோலிவுட்டில் மணி ரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ்.

இவர், சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சிப்பவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அதிதி கூறியதாவது, விமர்சனம் செய்பவர்களை விட்டு நாம் ஓடிப்போய்விட முடியாது. எந்த மாதிரி விமர்சனமாக இருந்தாலும் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை விமர்சிக்கிறவர்கள் ஏதோ ஒரு பிரச்சினையால் வேதனைப்படுகிறார்கள் என்பது எனது கருத்து.

அவர்கள் விஷயத்தில் நாம் ஒன்றுதான் செய்ய முடியும் அது என்னவென்றால் அவர்களை பார்த்து பரிதாபப்பட வேண்டும். அது மட்டுமன்றி அவர்கள் நல்லபடியாக நலமாக வேண்டும் என்று அவர்களுக்காக பிரார்த்தனை கூட நான் செய்வது உண்டு.

இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வேண்டும் என்று எழுதியும் அனுப்புவேன். அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்று கூறினார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here