மதுரைக் கதைக்களத்தில் களமிறங்கும் அதர்வா முரளி !

0
25

‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீ கணேஷ், இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’

இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம்.

அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை.

அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடைபெறும் சம்பவங்களே படம்.

மேலும் பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்.

‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும் என்கிறார் இயக்குனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here