ரசிகர்கள் கிண்டல் – பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன் !

0
29

தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம், தெலுங்கில் ரவி தேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி.

நீண்ட இடைவேளைக்கு பின்பு, ஸ்ருதியின் முகம் சற்றே மாறிவிட்டதாக ரசிகர்கள், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோவிற்கு கமெண்ட் கொடுத்தனர்.

ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:- “குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி மற்றவர்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள மாட்டேன்.

இது எனது முகம். எனது வாழ்க்கை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உடல் மாற்றங்கள் என்பது சுலபமான விஷயம் இல்லை. நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதை சொல்வதற்கு வெட்கப்படவில்லை.

மனதின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here