நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் காலமானார்

0
42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால், தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தைப் பார்த்த பலரும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினர்.

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடித்திருக்கும் அதோ அந்த பறவை போல திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தந்தையை இழந்துவாடும் நடிகை அமலாபாலுக்கு அவரது திரைத்துறை நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3 மணிக்கு கேரளா, குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here