வாழ்க்கை தலைகீழாக புரண்ட வாழ்க்கையிலிருந்து மீண்ட விஷ்ணு விஷால்

0
59

கோலிவுட்டில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்
விஷ்ணு விஷால்.

தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது வாழ்க்கை தலைகீழாக புரண்டது. மனைவியின் விவாகரத்து, நிதி இழப்புகளால் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, “நான் 2 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன். சொந்த வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டன. நானும், எனது மனைவியும் பிரிந்து தனித்தனி வீடுகளில் வாழ்ந்தோம்.

மனைவி பிரிவால் மதுவுக்கு அடிமையானேன். மன அழுத்தம் ஏற்பட்டது.
தூக்கம் வரவில்லை. உடல் பலகீனமானது. நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் நான் தயாரித்த படத்தை 21 நாளில் கைவிட்டேன். படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டு படுக்கையில் இருந்தேன். 11 கிலோ எடை கூடியது. நல்ல பட வாய்ப்புகளை இழந்தேன்.

விவாகரத்து, குழந்தையின் பிரிவு, பண இழப்பு, காயம், குடிப்பழக்கம் ஆகியவற்றால் எனது வாழ்க்கை சீர்குலைந்தது.

பிறகு மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்தேன். பயிற்சியாளர் வைத்து உடற்பயிற்சி செய்தேன். மதுவை குறைத்தேன். யோகா கற்றேன். 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வலுவாக மாறி இருக்கிறேன்.

என்னைப்போல் நிறைய பேர் இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்வது நேர்மறையாக சிந்தித்து வாழ்க்கையை ஒழுங்கு படுத்தி மீண்டு வாருங்கள்.”என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here