தலைவா .. தலைவா – விஜய் செஞ்ச செல்பி !

0
27

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் மட்டுமின்றி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் மாலை 6.15 மணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் விஜய், காரில் வெளியே வந்தார்.

பின்னர் அவர் தான் வந்த காரை சுரங்கத்தின் முன்பு நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கி, தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

தொடர்ந்து நடிகர் விஜய், தான் வைத்திருந்த செல்போனை எடுத்து ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்தார். இதைபார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

பின்னர் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு வேனில் இருந்து கீழே இறங்கினார்.

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here