சிம்பு சினிமாவில் எனது முதல் நண்பர் – பிரபல நடிகர்

0
13

2009ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.

அதன் பின்னர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்  என வெற்றிப்படங்களை கொடுத்தார். 2018ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படம் விஷ்ணு விஷால் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில், சினிமா தனக்கு கிடைத்த முதல் நான் நடிகர் சிம்பு தான் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘எனது முதல் திரைப்படத்திற்குப் பிறகு, சிம்பு தான் இந்த துறையில் எனது முதல் நண்பர்.

நாங்கள் இன்னும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். இந்த துறையில் பெரும்பாலானவர்களை விட அவர் எதையும் நேரடியாக கூறும் குணம் கொண்டவர்.

அவர் ராட்சசன் படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தபோது, சினிமா குறித்த விஷயங்களை அவரது அனுபவத்தின் மூலம் எனக்கு தெரிவித்தார்’ என கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here