சர்ச்சைக்குரிய காட்சியால் சிக்கலுக்குள்ளான நடிகர் பிரசன்னா!

0
53

துல்கர் சல்மான் நடிப்பில் ‘வரனே அவஸ்யமுண்ட்’ என்ற மலையாள திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷினி ஆகியோர் இதில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், சுரேஷ் கோபியின் நாய்க்கு பிரபாகரன் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, துல்கர் சல்மான் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் சமூக ஊடக பயனர்களால் விமர்சிக்கப்பட்டனர்.

பின்னர் துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார். மேலும் நடிகர் பிரசன்னா சர்ச்சைக்குரிய இந்த காட்சியை விளக்க முயன்றார். அத்துடன் தவறாகப் புரிந்துகொண்டு வெறுப்பை பரப்ப வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவரும் விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் சிலர் அவரையும், அவரது குடும்பத்தினரையும் மோசமாகப் பேசினர். இதனால் பிரசன்னா மிகுந்த வருத்தமடைந்துள்ளார். அத்துடன், சமூக ஊடக தளங்களில் இருந்து முற்றிலும் விலகுவதாக அவர் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here